Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஊக்கம் உடைமை

Energy

பொருட்பால் · WealthKural 595 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 595

Tamil original

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

Read the sounds · Transliteration

Vellath Thanaiya Malarneettam Maandhardham
Ullath Thanaiyadhu Uyarvu

Understand the idea · English meaning

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.

Connect it to life today · Modern meaning

A person's growth is often as large as the vision and effort they carry within. Someone who begins coding with a serious goal and keeps learning can rise far beyond their first small project.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

Kalaignar

கலைஞர் : தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்