Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஆள்வினை உடைமை

Manly Effort

பொருட்பால் · WealthKural 612 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 612

Tamil original

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

Read the sounds · Transliteration

Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai
Theerndhaarin Theerndhandru Ulaku

Understand the idea · English meaning

Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

Connect it to life today · Modern meaning

Do not abandon a task halfway through, because the world loses trust in people who leave their work unfinished. For example, a group project succeeds only when someone follows the plan through to the final detail.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

Kalaignar

கலைஞர் : எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்