Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அமைச்சு

The Office of Minister of state

பொருட்பால் · WealthKural 634 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 634

Tamil original

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு.

Read the sounds · Transliteration

Theridhalum Therndhu Seyalum Orudhalaiyaach
Chollalum Valladhu Amaichchu

Understand the idea · English meaning

The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and ofer assuring advice (in time of necessity).

Connect it to life today · Modern meaning

A good minister studies what should be done, chooses the best way to do it, and speaks clearly once the decision is made. For example, a leader should compare options, act at the right time, and explain the final plan without wavering.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

Kalaignar

கலைஞர் : ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்