Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அமைச்சு

The Office of Minister of state

பொருட்பால் · WealthKural 635 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 635

Tamil original

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

Read the sounds · Transliteration

Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun
Thiranarindhaan Therchchith Thunai

Understand the idea · English meaning

He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions).

Connect it to life today · Modern meaning

The best adviser understands right conduct, speaks with mature judgment, and knows how to turn advice into action. For example, a trusted mentor can explain what is fair, express it clearly, and suggest practical steps that will work.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.

Kalaignar

கலைஞர் : அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்