Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைத்திட்பம்

Power in Action

பொருட்பால் · WealthKural 661 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 661

Tamil original

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

Read the sounds · Transliteration

Vinaiththitpam Enpadhu Oruvan Manaththitpam
Matraiya Ellaam Pira

Understand the idea · English meaning

Firmness in action is (simply) one’s firmness of mind; all other (abilities) are not of this nature.

Connect it to life today · Modern meaning

Real strength in completing work comes from strength of mind; other skills matter only when determination guides them. A talented student still needs the discipline to finish the assignment.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

Kalaignar

கலைஞர் : மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது