Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தூது

The Envoy

பொருட்பால் · WealthKural 681 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 681

Tamil original

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

Read the sounds · Transliteration

Anputaimai Aandra Kutippiraththal Vendhavaam
Panputaimai Thoodhuraippaan Panpu

Understand the idea · English meaning

The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.

Connect it to life today · Modern meaning

A good ambassador needs affection for their people, a respected character, and qualities their ruler can trust. A student representing a club should care about its members and behave in a way that earns confidence.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

Kalaignar

கலைஞர் : அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்