Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைசெயல்வகை

Modes of Action

பொருட்பால் · WealthKural 680 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 680

Tamil original

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.

Read the sounds · Transliteration

Uraisiriyaar Ulnatungal Anjik Kuraiperin
Kolvar Periyaarp Panindhu

Understand the idea · English meaning

Fearing their people's inner apprehensions, Men of minor realms bow before mightier rulers, accepting terms.

Connect it to life today · Modern meaning

When weaker leaders face a stronger power, they may accept its terms to protect their people. A small community may cooperate with a larger organization when resistance would put residents at risk.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

Kalaignar

கலைஞர் : தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்