Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தூது

The Envoy

பொருட்பால் · WealthKural 687 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 687

Tamil original

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை.

Read the sounds · Transliteration

Katanarindhu Kaalang Karudhi Itanarindhu
Enni Uraippaan Thalai

Understand the idea · English meaning

He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.

Connect it to life today · Modern meaning

The best messenger knows their duty, chooses the right time and place, and thinks carefully before speaking. A student raising a sensitive issue should plan what to say and speak privately when the teacher can listen.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.

Kalaignar

கலைஞர் : ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்