Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தூது

The Envoy

பொருட்பால் · WealthKural 688 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 688

Tamil original

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.

Read the sounds · Transliteration

Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin
Vaaimai Vazhiyuraippaan Panpu

Understand the idea · English meaning

The qualifications of him who faithfully delivers his (sovereign’s) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.

Connect it to life today · Modern meaning

A trustworthy messenger is honest, supported by good relationships, brave, and faithful to the message. A volunteer reporting a problem should tell the truth, seek the right support, and not be intimidated.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

Kalaignar

கலைஞர் : துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்