Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தூது

The Envoy

பொருட்பால் · WealthKural 689 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 689

Tamil original

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

வாய்சேரா வன்கணவன்.

Read the sounds · Transliteration

Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram
Vaaiseraa Vanka Navan

Understand the idea · English meaning

He alone is fit to communicate (his sovereign’s) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).

Connect it to life today · Modern meaning

A messenger must deliver the ruler’s reply without letting fear make them add insulting or damaging words. Even under pressure, a spokesperson should repeat the agreed decision accurately.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.

Kalaignar

கலைஞர் : ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்