Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மன்னரைச் சேர்ந்தொழுகல்

Conduct in the Presence of the King

பொருட்பால் · WealthKural 692 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 692

Tamil original

மன்னர் விழைப விழையாமை மன்னரால்

மன்னிய ஆக்கந் தரும்.

Read the sounds · Transliteration

Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal
Manniya Aakkan Tharum

Understand the idea · English meaning

For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

Connect it to life today · Modern meaning

A person serving a ruler should not chase the ruler’s favorite people or interests for personal gain; restraint can earn lasting trust and reward. An adviser who avoids flattering every favorite may be trusted with important work.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.

Kalaignar

கலைஞர் : மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்