Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மன்னரைச் சேர்ந்தொழுகல்

Conduct in the Presence of the King

பொருட்பால் · WealthKural 694 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 694

Tamil original

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.

Read the sounds · Transliteration

Sevichchollum Serndha Nakaiyum Aviththozhukal
Aandra Periyaa Rakaththu

Understand the idea · English meaning

While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.

Connect it to life today · Modern meaning

In the presence of a powerful leader, do not whisper to one person or share private laughter with another. During a formal meeting, speak openly and avoid side conversations that look disrespectful.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

Kalaignar

கலைஞர் : ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்