Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மன்னரைச் சேர்ந்தொழுகல்

Conduct in the Presence of the King

பொருட்பால் · WealthKural 699 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 699

Tamil original

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.

Read the sounds · Transliteration

Kolappattem Endrennik Kollaadha Seyyaar
Thulakkatra Kaatchi Yavar

Understand the idea · English meaning

Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) “We are esteemed by the king “.

Connect it to life today · Modern meaning

Clear judgment does not treat special favor as permission to do what the ruler dislikes. Being a trusted employee does not make it acceptable to ignore workplace rules.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

Kalaignar

கலைஞர் : ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்