Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மன்னரைச் சேர்ந்தொழுகல்

Conduct in the Presence of the King

பொருட்பால் · WealthKural 698 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 698

Tamil original

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோடு ஒழுகப் படும்.

Read the sounds · Transliteration

Ilaiyar Inamuraiyar Endrikazhaar Nindra
Oliyotu Ozhukap Patum

Understand the idea · English meaning

Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, “He is our junior (in age) and connected with our family!”.

Connect it to life today · Modern meaning

Respect a ruler’s position instead of looking down on them because they are younger or related to you. A younger team captain still deserves respect for the responsibility they carry.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.

Kalaignar

கலைஞர் : எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்