Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

மக்கட்பேறு

The Wealth of Children

அறத்துப்பால் · VirtueKural 70 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 70

Tamil original

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல் எனும் சொல்.

Read the sounds · Transliteration

Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai
Ennotraan Kol Enum Sol

Understand the idea · English meaning

(So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father.

Connect it to life today · Modern meaning

A child's best way of repaying a parent's care is to live so well that others admire the values they were taught. This honour comes from conduct, not fame or wealth. For example, when an adult child acts honestly, helps others, and takes responsibility, people may say that the parents raised them exceptionally well.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

Kalaignar

கலைஞர் : ``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்