Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அன்புடைமை

The Possession of Love

அறத்துப்பால் · VirtueKural 71 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 71

Tamil original

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

Read the sounds · Transliteration

Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar
Punkaneer Poosal Tharum

Understand the idea · English meaning

Is there any fastening that can shut in love ? Tears of the afectionate will publish the love that is within.

Connect it to life today · Modern meaning

Love cannot always be hidden or locked away. When someone we care about suffers, our concern often appears through tears, words, or immediate action. For example, a normally quiet friend may become visibly upset and rush to help when another friend is injured. Their response reveals the care they were carrying inside.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

Kalaignar

கலைஞர் : உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்