Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அவை அஞ்சாமை

Not to dread the Council

பொருட்பால் · WealthKural 725 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 725

Tamil original

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

Read the sounds · Transliteration

Aatrin Alavarindhu Karka Avaiyanjaa
Maatrang Kotuththar Poruttu

Understand the idea · English meaning

In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).

Connect it to life today · Modern meaning

Study sound reasoning and clear language so you can answer questions confidently in a public discussion. Knowing how to support a claim with evidence helps when classmates challenge your idea.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

Kalaignar

கலைஞர் : அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்