Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அவை அஞ்சாமை

Not to dread the Council

பொருட்பால் · WealthKural 724 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 724

Tamil original

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

Read the sounds · Transliteration

Katraarmun Katra Selachchollith Thaamkatra
Mikkaarul Mikka Kolal

Understand the idea · English meaning

(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (know ledge) from their superiors (in learning).

Connect it to life today · Modern meaning

Share what you have learned clearly with knowledgeable people, then learn from those who know more than you. After presenting a project, a student should welcome a mentor's corrections instead of treating them as an insult.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.

Kalaignar

கலைஞர் : அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்