Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அவை அஞ்சாமை

Not to dread the Council

பொருட்பால் · WealthKural 723 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 723

Tamil original

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

Read the sounds · Transliteration

Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar
Avaiyakaththu Anjaa Thavar

Understand the idea · English meaning

Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

Connect it to life today · Modern meaning

Many people can face physical danger, but far fewer can speak without fear before an intelligent audience. Asking a difficult question in a packed seminar can require more courage than staying silent.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

Kalaignar

கலைஞர் : அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்