Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நாடு

The Land

பொருட்பால் · WealthKural 735 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 735

Tamil original

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.

Read the sounds · Transliteration

Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum Vendhalaikkum
Kolkurumpum Illadhu Naatu

Understand the idea · English meaning

A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.

Connect it to life today · Modern meaning

A good country is not torn apart by destructive factions, hidden internal sabotage, or violent gangs that threaten public life. A neighborhood becomes unsafe when rival groups undermine every shared project and intimidation replaces cooperation.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.

Kalaignar

கலைஞர் : பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்