The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Manineerum Mannum Malaiyum Aninizhar
Kaatum Utaiya Tharan
Understand the idea · English meaning
A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.
Connect it to life today · Modern meaning
A strong fort needs clear water, open ground, high terrain, and cool natural cover. A disaster shelter is more dependable when it has clean water, room to move, higher ground, and protection from heat.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.
Kalaignar
கலைஞர் : ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்