Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

படைமாட்சி

The Excellence of an Army

பொருட்பால் · WealthKural 763 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 763

Tamil original

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.

Read the sounds · Transliteration

Oliththakkaal Ennaam Uvari Ela�ppakai
Naakam Uyirppak Ketum

Understand the idea · English meaning

What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.

Connect it to life today · Modern meaning

A loud crowd is not necessarily a strong one; many fearful people can be overcome by a smaller group with real courage and discipline. Noise alone does not create power. For example, a large online campaign may achieve little when a small, well-prepared team calmly addresses the real issue.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.

Kalaignar

கலைஞர் : எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்