Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நட்பாராய்தல்

Investigation in forming Friendships

பொருட்பால் · WealthKural 792 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 792

Tamil original

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

Read the sounds · Transliteration

Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai
Thaansaam Thuyaram Tharum

Understand the idea · English meaning

The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.

Connect it to life today · Modern meaning

A friendship chosen without repeated care and judgment can eventually cause deep suffering. First impressions are not enough for a close bond. For example, ignoring a person's repeated dishonesty may later leave you responsible for debts or damage caused by their choices.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

Kalaignar

கலைஞர் : திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்