Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நட்பாராய்தல்

Investigation in forming Friendships

பொருட்பால் · WealthKural 799 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 799

Tamil original

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.

Read the sounds · Transliteration

Ketungaalaik Kaivituvaar Kenmai Atungaalai
Ullinum Ullanj Chutum

Understand the idea · English meaning

The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one’s mind at the time of death.

Connect it to life today · Modern meaning

When people abandon us in our worst hour, remembering that betrayal can hurt even long afterward. A friendship that disappears in crisis leaves a lasting wound. For example, someone may remember for years the friend who walked away when help was urgently needed.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.

Kalaignar

கலைஞர் : ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்