Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பழைமை

Familiarity

பொருட்பால் · WealthKural 801 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 801

Tamil original

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

Read the sounds · Transliteration

Pazhaimai Enappatuvadhu Yaadhenin Yaadhum
Kizhamaiyaik Keezhndhitaa Natpu

Understand the idea · English meaning

Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).

Connect it to life today · Modern meaning

Long friendship allows trusted friends to act with familiar freedom without destroying the bond. If a longtime friend makes a small mistake while trying to help, do not treat it as betrayal.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

Kalaignar

கலைஞர் : பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்