Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தீ நட்பு

Evil Friendship

பொருட்பால் · WealthKural 814 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 814

Tamil original

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.

Read the sounds · Transliteration

Amarakaththu Aatrarukkum Kallaamaa Annaar
Thamarin Thanimai Thalai

Understand the idea · English meaning

Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.

Connect it to life today · Modern meaning

Being alone is better than relying on people who abandon you when you need them, like an untrained horse throwing its rider. If a teammate disappears before every deadline, working alone may be safer than depending on them.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.

Kalaignar

கலைஞர் : போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்