Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தீ நட்பு

Evil Friendship

பொருட்பால் · WealthKural 813 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 813

Tamil original

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.

Read the sounds · Transliteration

Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu
Kolvaarum Kalvarum Ner

Understand the idea · English meaning

Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.

Connect it to life today · Modern meaning

A friendship measured only by profit is just a transaction, no more honorable than a deal driven by payment or theft. If someone joins your group only for rewards and leaves when work begins, do not mistake that for friendship.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.

Kalaignar

கலைஞர் : பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்