Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தீ நட்பு

Evil Friendship

பொருட்பால் · WealthKural 812 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 812

Tamil original

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்?

Read the sounds · Transliteration

Urinnattu Arinoruum Oppilaar Kenmai
Perinum Izhappinum En?

Understand the idea · English meaning

Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?

Connect it to life today · Modern meaning

There is little value in a friendship that lasts only while someone is gaining from it. If a person messages you only before exams or when they need money, losing that contact is not a real loss.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?

Kalaignar

கலைஞர் : தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?