Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கூடா நட்பு

Unreal Friendship

பொருட்பால் · WealthKural 823 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 823

Tamil original

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

ஆகுதல் மாணார்க் கரிது.

Read the sounds · Transliteration

Palanalla Katrak Kataiththu Mananallar
Aakudhal Maanaark Karidhu

Understand the idea · English meaning

Though (one’s) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

Connect it to life today · Modern meaning

Reading many good books does not make a hostile person kind-hearted; knowledge without goodwill does not create true friendship. Someone can quote lessons about kindness while still hoping others fail.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.

Kalaignar

கலைஞர் : அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்