Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பேதைமை

Folly

பொருட்பால் · WealthKural 834 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 834

Tamil original

ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.

Read the sounds · Transliteration

Odhi Unarndhum Pirarkkuraiththum Thaanatangaap
Pedhaiyin Pedhaiyaar Il

Understand the idea · English meaning

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.

Connect it to life today · Modern meaning

No one is more foolish than a person who studies good principles, teaches them to others, and then refuses to live by them. A student who lectures classmates about honesty while cheating has learned words, not wisdom.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

Kalaignar

கலைஞர் : படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது