Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இகல்

Hostility

பொருட்பால் · WealthKural 854 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 854

Tamil original

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

Read the sounds · Transliteration

Inpaththul Inpam Payakkum Ikalennum
Thunpaththul Thunpang Ketin

Understand the idea · English meaning

If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.

Connect it to life today · Modern meaning

Letting go of hatred removes the deepest kind of pain and opens the way to the deepest joy. For example, making peace with a family member can bring relief that revenge never could.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

Kalaignar

கலைஞர் : துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்