Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பகைமாட்சி

The Might of Hatred

பொருட்பால் · WealthKural 868 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 868

Tamil original

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு

இனனிலனாம் ஏமாப் புடைத்து.

Read the sounds · Transliteration

Kunanilanaaik Kutram Palavaayin Maatraarkku
Inanilanaam Emaap Putaiththu

Understand the idea · English meaning

He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.

Connect it to life today · Modern meaning

A person with no good qualities and many faults loses allies, and that loss strengthens the enemy. For example, a dishonest leader may find that former supporters leave just when the organization is under pressure.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.

Kalaignar

கலைஞர் : குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்