Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உட்பகை

Enmity within

பொருட்பால் · WealthKural 884 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 884

Tamil original

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா

ஏதம் பலவும் தரும்.

Read the sounds · Transliteration

Manamaanaa Utpakai Thondrin Inamaanaa
Edham Palavum Tharum

Understand the idea · English meaning

The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disafection among (one’s) relations.

Connect it to life today · Modern meaning

Hidden resentment in a person's mind can create many troubles and turn members of the same circle against one another. For example, an unspoken grudge in a family can spread until relatives stop supporting each other.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

Kalaignar

கலைஞர் : மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்