Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உட்பகை

Enmity within

பொருட்பால் · WealthKural 883 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 883

Tamil original

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து

மட்பகையின் மாணத் தெறும்.

Read the sounds · Transliteration

Utpakai Anjiththar Kaakka Ulaivitaththu
Matpakaiyin Maanath Therum

Understand the idea · English meaning

Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter’s clay.

Connect it to life today · Modern meaning

Be alert to hostility within your own group, because it can destroy the group in a weak moment like a tool cutting a clay pot. For example, hidden factions can break a team apart when an urgent crisis arrives.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.

Kalaignar

கலைஞர் : உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்