Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெண்வழிச் சேரல்

Being led by Women

பொருட்பால் · WealthKural 901 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 901

Tamil original

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்

வேண்டாப் பொருளும் அது.

Read the sounds · Transliteration

Manaivizhaivaar Maanpayan Eydhaar Vinaivizhaiyaar
Ventaap Porulum Adhu

Understand the idea · English meaning

Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

Connect it to life today · Modern meaning

The verse warns against letting excessive attachment to a spouse replace duty and responsible purpose. For example, someone may skip an important community task just to avoid a partner’s displeasure.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

Kalaignar

கலைஞர் : கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்