Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கள்ளுண்ணாமை

Not Drinking Palm-Wine

பொருட்பால் · WealthKural 926 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 926

Tamil original

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

Read the sounds · Transliteration

Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum
Nanjunpaar Kallun Pavar

Understand the idea · English meaning

They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.

Connect it to life today · Modern meaning

A person who repeatedly drinks is like someone taking poison: both surrender their clear awareness. For example, regular heavy drinking can damage health and make ordinary life feel as if the person is barely present.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

Kalaignar

கலைஞர் : மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்