Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கள்ளுண்ணாமை

Not Drinking Palm-Wine

பொருட்பால் · WealthKural 928 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 928

Tamil original

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

Read the sounds · Transliteration

Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu
Oliththadhooum Aange Mikum

Understand the idea · English meaning

Let (the drunkard) give up saying “I have never drunk”; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.

Connect it to life today · Modern meaning

A drunkard should not claim never to drink, because intoxication can reveal what they tried to hide. For example, someone who denies drinking may confess or behave recklessly once they lose control.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.

Kalaignar

கலைஞர் : மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்