Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கள்ளுண்ணாமை

Not Drinking Palm-Wine

பொருட்பால் · WealthKural 929 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 929

Tamil original

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

Read the sounds · Transliteration

Kaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk
Kuliththaanaith Theeththureei Atru

Understand the idea · English meaning

Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

Connect it to life today · Modern meaning

Reasoning with someone who is deeply drunk is as useless as searching underwater for a drowned person with a torch. For example, wait until a drunk friend is sober before discussing their dangerous choices.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

Kalaignar

கலைஞர் : குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்