Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குடிமை

Nobility

பொருட்பால் · WealthKural 959 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 959

Tamil original

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

Read the sounds · Transliteration

Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum
Kulaththil Pirandhaarvaaich Chol

Understand the idea · English meaning

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one’s birth).

Connect it to life today · Modern meaning

A person's words often reveal their upbringing just as a crop reveals its soil. For example, the way an applicant speaks to everyone during an interview can show whether they have learned respect.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

Kalaignar

கலைஞர் : விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்