Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மானம்

Honour

பொருட்பால் · WealthKural 964 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 964

Tamil original

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.

Read the sounds · Transliteration

Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar
Nilaiyin Izhindhak Katai

Understand the idea · English meaning

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

Connect it to life today · Modern meaning

When someone abandons a respected position and its principles, their former standing falls away like hair from the head. For example, a trusted official who sells decisions for approval can quickly lose the respect once earned.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

Kalaignar

கலைஞர் : மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்