Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மானம்

Honour

பொருட்பால் · WealthKural 968 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 968

Tamil original

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து.

Read the sounds · Transliteration

Marundhomatru Oonompum Vaazhkkai Perundhakaimai
Peetazhiya Vandha Itaththu

Understand the idea · English meaning

For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.

Connect it to life today · Modern meaning

Keeping the body alive is not a real remedy if doing so requires surrendering every principle and one's dignity. For example, an employee should seek help or another job rather than sign a serious lie that permanently stains their integrity.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?

Kalaignar

கலைஞர் : சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்