Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சான்றாண்மை

Perfectness

பொருட்பால் · WealthKural 986 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 986

Tamil original

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.

Read the sounds · Transliteration

Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi
Thulaiyallaar Kannum Kolal

Understand the idea · English meaning

The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one’s inferiors.

Connect it to life today · Modern meaning

A person's character is tested by whether they can accept defeat, even from someone less experienced or less powerful. For example, a senior player who congratulates a junior teammate after losing shows real maturity.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

Kalaignar

கலைஞர் : சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்