Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இனியவை கூறல்

The Utterance of Pleasant Words

அறத்துப்பால் · VirtueKural 100 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 100

Tamil original

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

Read the sounds · Transliteration

Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru

Understand the idea · English meaning

To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.

Connect it to life today · Modern meaning

Using hurtful words when kind and truthful words are available is like choosing sour, unripe fruit while ripe fruit is ready to eat. We often have a choice in how we express the same message. For example, saying 'Please lower the volume' is wiser than insulting someone for making noise.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

Kalaignar

கலைஞர் : இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்