Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நாணுடைமை

Shame

பொருட்பால் · WealthKural 1012 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1012

Tamil original

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு.

Read the sounds · Transliteration

Oonutai Echcham Uyirkkellaam Veralla
Naanutaimai Maandhar Sirappu

Understand the idea · English meaning

Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.

Connect it to life today · Modern meaning

Food, clothing, and other needs are common to everyone; what especially marks a good person is the modesty that keeps them from shameful acts. For example, someone may dress like everyone else but stand out by refusing to cheat.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

Kalaignar

கலைஞர் : உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்