Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உழவு

Farming

பொருட்பால் · WealthKural 1033 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1033

Tamil original

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

Read the sounds · Transliteration

Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam
Thozhudhuntu Pinsel Pavar

Understand the idea · English meaning

They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.

Connect it to life today · Modern meaning

The verse praises those who live by farming as independent providers; others depend on what farmers produce. For example, a family that grows its own food contributes something essential instead of relying entirely on others for it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

Kalaignar

கலைஞர் : உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது