Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நல்குரவு

Poverty

பொருட்பால் · WealthKural 1042 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1042

Tamil original

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.

Read the sounds · Transliteration

Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum

Understand the idea · English meaning

When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).

Connect it to life today · Modern meaning

Severe poverty can take away both the comfort of the present and hope for a better future. For example, lacking money for food today may also prevent someone from getting healthcare or education tomorrow.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

Kalaignar

கலைஞர் : பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது