Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நல்குரவு

Poverty

பொருட்பால் · WealthKural 1043 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1043

Tamil original

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குரவு என்னும் நசை.

Read the sounds · Transliteration

Tholvaravum Tholum Ketukkum Thokaiyaaka
Nalkuravu Ennum Nasai

Understand the idea · English meaning

Hankering poverty destroys at once the greatness of (one’s) ancient descent and (the dignity of one’s) speech.

Connect it to life today · Modern meaning

When poverty creates desperate craving, it can damage a person's inherited dignity and the respect carried in their words. For example, constant financial pressure may push someone into humiliating demands or reckless deals.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

Kalaignar

கலைஞர் : ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்