Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நல்குரவு

Poverty

பொருட்பால் · WealthKural 1047 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1047

Tamil original

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.

Read the sounds · Transliteration

Aranjaaraa Nalkuravu Eendradhaa Yaanum
Piranpola Nokkap Patum

Understand the idea · English meaning

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

Connect it to life today · Modern meaning

When poverty is joined with conduct that abandons virtue, even close family may begin to treat a person like a stranger. For example, repeated dishonest choices made in desperation can break the trust of a person's own household.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

Kalaignar

கலைஞர் : வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்