Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இரவச்சம்

The Dread of Mendicancy

பொருட்பால் · WealthKural 1064 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1064

Tamil original

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு.

Read the sounds · Transliteration

Itamellaam Kollaath Thakaiththe Itamillaak
Kaalum Iravollaach Chaalpu

Understand the idea · English meaning

Even the whole world cannot suficiently praise the dignity that would not beg even in the midst of destitution.

Connect it to life today · Modern meaning

The dignity of refusing to beg, even when life offers no easy path, is beyond any wealth the world can offer. Someone who keeps seeking honest work through hardship shows a strength money cannot measure.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.

Kalaignar

கலைஞர் : வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது