Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இரவச்சம்

The Dread of Mendicancy

பொருட்பால் · WealthKural 1069 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1069

Tamil original

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

Read the sounds · Transliteration

Iravulla Ullam Urukum Karavulla
Ulladhooum Indrik Ketum

Understand the idea · English meaning

To think of (the evil of) begging is enough to melt one’s heart; but to think of refusal is enough to break it.

Connect it to life today · Modern meaning

Thinking about the pain of begging can soften the heart, but seeing someone hide help from a needy person can crush it. A community may feel compassion for a struggling family and anger at a wealthy neighbor who refuses aid out of spite.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.

Kalaignar

கலைஞர் : இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது